காட்பாடியில் உள்ள மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் காங்கேயநல்லூர் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார அலுவலர் சிவகுமார் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும் வீட்டின் மொட்டை மாடியில் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் பயன்படாத பொருட்கள் ஆகிய டயர்உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் தேங்காய் ஓடுகள் இதுபோன்ற பொருட்களில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் என எடுத்துரைத்தார். மேலும் வீட்டில் உள்ள பிரிட்ஜில் பின்புறம் தண்ணீர் தேங்கும் அதிலும் கொசுக்கள் உற்பத்தியாகும் வாரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும்.
இதனால் டெங்கு காய்ச்சல்வராமல் பாதுகாக்க முடியும் என விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பள்ளிகளில் அனைத்து அறைகளிலும் கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்கப்பட்டது. மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment