வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வன்றந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜானி. இவர் மீது வேலூர் வடக்கு, சத்துவாச்சாரி, விருதம்பட்டு, காட்பாடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் உள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு பெங்களூருவில் பதுங்கி இருந்த ஜானியை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வேலூர் வடக்கு, விருதம்பட்டு காவல் நிலையங்களில் உள்ள குற்ற வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
இதற்காக பலத்த போலீஸ் காவலுடன் ஜானி கடலூரில் இருந்து வேனில் வேலூருக்கு அழைத்து வரப்பட்டு ஜெடிசியல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார் இந்த வழக்கைவிசாரித்த மேஜிஸ்திரேட் அடுத்த மாதம் 14ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதை அடுத்து ஜானி மீண்டும் பலத்த போலீஸ் காவலுடன் வேனில் கடலூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment