வேலூர் மாவட்டம் காட்பாடி திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியும் கருத்தரங்கமும் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் சென்சுருள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின. பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.செந்தில்வேல்முருகன் க.பேரணியை தொடக்கி வைத்தார்.
இதற்கான கருத்தரங்கம் பல்கலைக்கழகத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ் விஜய் ஆனந்த் வரவேற்று பேசினார். பல்கலைக்கழக புல முதல்வர் (டீன்) பேராசிரியர் சி. தண்டபாணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர் பாபு ஜனார்த்தனம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஜே மாதவன், முன்னாள் பதிவாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.
ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவருமான முனைவர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாணவ மாணவிகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் பேரணியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment