வேலுர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொள்ளக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன் தனலட்சுமி ஆகிய தம்பதியர்களின் இளைய மகன் சந்தோஷ் வயது 13 அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகிறார், இந்த நிலையில் சந்தோஷ் கடந்த 28 ஆம் தேதி அன்று இரவு இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று உள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக ராணிப்பேட்டை மாவட்டம் நாராயண குப்பம் அருகே விபத்து ஏற்பட்டு பலத்த படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை மூளை சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த சந்தோஷின் உடலின் உள்ள இதயம் மற்றும் இரண்டு நூரையீரல்கள் சென்னையில் உள்ள MGM மருத்துவமனைக்கும் கல்லீரல்,சிறுநீரம், ராணிப்பேட்டை CMC மருத்துவமனைக்கும் ஆகிய உறுப்புகளை தானமாக செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்து மருத்துவமனைகளுக்கு வழங்கினார்கள்.
.jpg)
No comments:
Post a Comment