விடுதலைக் சிறுத்தை கட்சியின் சார்பில் ரயில் மறியல். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 28 December 2023

விடுதலைக் சிறுத்தை கட்சியின் சார்பில் ரயில் மறியல்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ரயில் மறியல் பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய இரண்டு நபர்களை குறித்து விவாதம் நடத்த பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஏற்றுக்கொள்ளாத சபாநாயகர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் எதிர்க்கட்சி நூற்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தற்காலிக தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, வேலூர் மேற்கு மாவட்ட விசிக கட்சிகள் சார்பில் மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ரயில் ரயில் முற்றுகையிட முயன்ற போது குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் ரயில்வே போலீசார் இணைந்து சுமார் 62 விடுதலை கட்சியினரை தடுத்து கைது செய்து தனியா திருமண மண்டபத்தில் அடைத்து வழக்கு பதிவு செய்து மாலை விடுதலை செய்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad