குடியாத்தம் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 29 December 2023

குடியாத்தம் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பு.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்எஸ். சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் வரவேற்றார். மற்றும் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் வட்டாட்சியர் சித்ராதேவி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரவணன் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் இளநிலை பொறியாளர் உமா மகேஸ்வரி நகர மன்ற உறுப்பினர்கள் ஜிஎஸ்.அரசு  ம. மனோஜ் நளினி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் நகராட்சி நிர்வாகம் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சமூக நலத்துறை காவல்துறை வருவாய் துறை எரிசக்தி துறை மின்சார துறை போன்ற பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர். 13.14.15.36 ஆகிய வார்டுகளில் இருந்து M M  மனுக்கள் 263 M M C மனுக்கள்‌ 493 மொத்தம் மொத்தம் 756 மனுக்கள் வர பெற்றன வரும் 30 நாட்களுக்குள் இதற்கு தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad