வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் வேலூர் மாவட்ட நடிகர் சங்கம் மற்றும் தமிழ்நாடு நாடக நாட்டுப்புற கலைஞர்களின் 22 ஆம் ஆண்டு கலை விழா மாநாடு இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நிறுவனர் பொது செயலாளர் ஜே.சிவகுமார் தலைமை தாங்கினார். கலைமாமணி புலவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வைத்தார். இந்நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக துணை வேந்தர் ஜிவி செல்வம் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கேஎம்ஜி கல்வி குழும செயலாளர் கேஎம்ஜி ராஜேந்திரன் அதிமுக அமைப்பு செயலாளர் வி.ராமு முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஜே கே என் பழனி முன்னாள் அரசு வழக்கறிஞர் கேஎம்.பூபதி நடிகர் சங்க சட்ட ஆலோசகர் எம்வி. ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறந்த நாடக கலைஞர்களுக்கு புதிய நீதி கட்சி தலைவர் நிறுவனர் ஏசி சண்முகம் கலந்து கொண்டு சிறந்த கலைஞர்களுக்கு கலை மாமணி விருது நற்சான்று வழங்குகிறார். இதில் வேலூர் புதுச்சேரி மாநிலம் தர்மபுரி திண்டுக்கல் திருவண்ணாமலை விழுப்புரம் நாமக்கல் மாவட்டத்திலிருந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.

மங்கல இசை தவில் நாதஸ்வரம் கலைஞர்கள் கோலாட்டம் மயிலாட்டம் நடன நிகழ்ச்சிகள் குச்சிப்புடி நடனம் பல நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஊர்வலமாக சென்று மாநாடு நடக்கும் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி கே எம் ஜி அரங்கில் வந்து அடைந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
.jpeg)

No comments:
Post a Comment