கூட்டத்திற்கு வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரமேஷ் கேவிகுப்பம் தொகுதி செயலாளர் பாரத் மகேந்திரன் மாவட்ட ஐடி விங் செயலாளர் பிரவீன் குமார் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதியநீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏசி. சண்முகம் அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்று பேசினார். அப்போது புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து கட்சிக்கும் பாரத பிரதமர் மோடிக்கும் பெருமை தேடி தர வேண்டும் என்றார்.
3வது முறையாக நரேந்திர மோடி அவர்கள் தான் பிரதமராக வருவார் அதை உணர்த்தும் வகையில் இன்று நடைபெற்ற நான்கு மாநில தேர்தல் முடிவுகளில் அருதி பெரும்பான்மையுடன் 3 மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துள்ளது புதிய நீதி கட்சி பார்லிமென்ட் நோக்கி செல்ல வேண்டும் என்றால் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். என்றும் மேற்கோள் காட்டி பேசினார் .நான் வேலூர் தொகுதியில் ஒரு பொது வேட்பாளராக தான் நான் நிற்கிறேன் எந்த ஜாதி அடிப்படையில் மத அடிப்படையில் சார்ந்து நிற்கவில்லை அனைவருக்கும் ஆன வேட்பாளராக தான் வேலூர் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் கடந்த நாடாளுமன்றதேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே நான் தோல்வியடைந்தேன்.
1பூத்துக்கு மூன்று ஓட்டுகள் அளித்து இருந்தாலே நான் வெற்றி பெற்றிருப்பேன் குடியாத்தம் அணைக்கட்டு கேவிகுப்பம் ஆம்பூர் சட்டமண்ற தொகுதிகள் என்னை ஜெயிக்க வைத்தது ஆனால் வாணியம்பாடியில் மட்டும் நான் தோற்றுப் போனேன் இருந்தாலும் பரவாயில்லை நான் உங்கள் வீட்டு மகனாக மறுபடியும் உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன் என்னை ஜெயிக்க வைத்து வேலூரில் ஒரு எம்பியாக நீங்கள் அரும்பாடு பட்டு என்னை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார் நிகழ்ச்சியில் புதியநீதி கட்சியின் நிர்வாகிகள் தலைமைகழகபேச்சாளர் கவிஞர் சம்பத்குமார் கொள்கை பரப்பு செயலாளர் ஹரி மகளிர் அணிய தொண்டரணியினர் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்


No comments:
Post a Comment