வேலூர் சலவன்பேட்டை பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் பாரதியார் நகரை சேர்ந்த ரோஜர் என்ற ரஞ்சித்குமார் (வயது 39) என்பதும், அவர் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment