வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் சத்துணவு படைத்த சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
புரட்சித்தாய் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று லட்சுமி திரையரங்கம் எதிரில் உள்ள எம் ஜி ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு புரட்சித்தாய் மக்கள் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் ஆர் வெங்கடேசன் தலைமை தாங்கினார் மற்றும் ஜி சௌந்தர்ராஜன், மாவட்ட செயலாளர் சேஷாத்திரி, மாவட்ட பொருளாளர் அய்யப்பன், நகர செயலாளர் வி சீனிவாசன், நகர அவைத் தலைவர் எம் மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இளங்கோ, அணைக்கட்டு சீனிவாசன், மகளிர் அணி செயலாளர் புனிதா சரண்யா கோகிலா ஞானபிரகாசம் சிவா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment