குடியாத்தம் அருகே இருசக்கர வாகனங்களை திருடியதாக 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 29- இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக பல புகார்கள் இதுதொடர்பாக நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் மகன் சிலம்பரசன்(வயது 27), பழனி மகன் ரமேஷ்(வயது 27), ரவி மகன் குமார்(வயது 26) ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து 29- இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment