கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பெண் சிசுவை சொந்த செலவில் அடக்கம் செய்த தலைமை காவலர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 December 2023

கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பெண் சிசுவை சொந்த செலவில் அடக்கம் செய்த தலைமை காவலர்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் பகுதியில் அரசு மருத்துவமனை பின்புறம் நேற்று கழிவுநீர் கால்வாயில் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட பெண் சிசு உடல் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு குடியாத்தம் நகர போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்‌ குழந்தையை வீசிவிட்டுச் சென்றது யார் என தெரியாது நிலையில் பெண் சிசுவுக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது .


இதனை அடுத்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரியும் கேசவன் என்ற காவலர் பிரேத பரிசோதனைக்காக வந்த பெண் காவலர் பிரியா உதவியுடன் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அங்கு முறைபடி சடங்குகள் செய்து சிசுக்கு  இறுதிச் சடங்கு செய்தனர் .


தனது சொந்த செலவில் எடுக்கப்பட்ட அனாதையாக மீட்கப்பட்ட பெண் சிசுவின் உடலை அடக்கம் செய்த தலைமை காவலர் கேசவனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad