வேலூர் மாவட்டம் அரியூர் திருமலைக்கோடி ஸ்ரீபுரம் திருக்கோயில் அருகில் பல ஆண்டு காலமாக நடைபாதையில் ஊசி மணி, பாசி மணி, டிபன் கடை, குழந்தைகளுக்கான பொம்மை கடை வைத்து வியாபாரம் செய்து பிழப்பு நடத்தும் தொழிலாளர்களை தொழில் செய்ய விடாமல் தடுக்கின்ற கோயில் நிர்வாகத்தையும், காவல் துறையையும் கண்டித்தும், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட், (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் CPIML வேலூர் மாவட்ட செயலாளர் சாரோஜா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பின்னர், தகவல் அறிந்து சமவெளிடத்திற்கு வந்த அரியூர் காவல்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்ட 29 தொழிலாளர்களை கைது செய்து அரியூர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டது
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment