வேலூர் மாவட்டம் மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த கைதி முனியாண்டி (வயது 37) இன்று காலை சிறை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் சிறையில் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக வேலூர் மத்திய சிறை காவலர்கள் சுந்தர மூர்த்தி, சரவணன், கமலநாதன் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment