வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலையில் 57 ஆம் ஆண்டு திருப்படித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வங்கி ஊழியர் வள்ளிமலை முருகன் சமய அறக்கட்டளை சார்பில் 57 ஆம்விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னதாக மஹாகணபதிக்கும், மலையப்பசுவாமி சண்முகநாதருக்கும், மூலவரான ஸ்ரீ சுப்பிரமணியருக்கும் சந்தன காப்பு அபிஷேகமும் வள்ளியம்மைக்கு மஞ்சள் காப்பு அபிஷேகமும் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்புடன் வடமாலை சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.இதனையடுத்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு அமுது படைத்தல் நிகழ்ச்சியுடன் கிரிவலம் நடைபெற்றது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பால் குடங்களுடன் கலந்து கொண்ட பக்தர்கள் படி பூஜை செய்து மலையப்ப சாமியை வழிபட்டனர்.பின்னர் சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாரதனை நடைபெற்றது அப்பொழுது பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க அரோகரா அரோகரா என கோஷம் உறுப்பினர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment