பெரிய கீசகுப்பம் மலையிலிருந்து அதிவிரைவு சாலை அமைப்பதற்கு லாரிகளில் மண் எடுத்து வருகின்றனர். இந்த லாரிகள் அனைத்தும் வள்ளி மலை காட்பாடி செல்லும் பிரதான சாலை வழியாக செல்கிறது. இந்த சாலை பெரிய கீசகுப்பம் பகுதியில் மலையிலிருந்துவந்து இணைக்கிறது. மேலும் மிக்ஜாம் புயலால் தொடர் மழை பெய்ததால் மலையிலிருந்து நீரூற்று மண் எடுத்துச் செல்லும் வழியாக தார் சாலைக்கு வருகிறது. இதனால் இந்த சாலை முற்றிலும் பழுதடைந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஒட்டிகள் பெரும்.அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வழியாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் விபத்துக்கு சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மத்திய அரசின் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பெரும் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விரைவு சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரிடம் இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் கோரிக்கை.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்.

No comments:
Post a Comment