பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் நடைபெற்ற 67வது தேசிய சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஏ. பி. நந்தகுமார், திருமதி வி. அமுலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் திரு. எம். சுனில் குமார், பள்ளிக்கல்வி இயக்குநர் (தொடக்க கல்வி) திரு. கண்ணப்பன் மண்டல குழு தலைவர் திரு. வெங்கடேசன், இணை இயக்குநர் திருமதி சசிகலா, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் திரு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி மணிமொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment