ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் சாலையோர வாசிகளுக்கு மதிய உணவு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 1 January 2024

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் சாலையோர வாசிகளுக்கு மதிய உணவு.


வேலூர்  மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின்  சார்பில் ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு காட்பாடியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு மதிய உணவு, குடிநீர், டவல் ஆகியவற்றை வழங்கினர். ஆங்கில புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு வழங்கப்பட்டது. காட்பாடி ரயில் சந்திப்பு பகுதியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒரு வேளை உணவு, குடிநீர், டவல் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.  

இந்த நிகழ்விற்கு அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். டாக்டர்.ஜார்ஜ் ஜோஷி, சுரேஷ்பிரபாகர குமார் ஆகியோர் ஒரு வேளை உணவு, குடிநீர், டவல் ஆகியவற்றை 50பேருக்கு வழங்கினர். மேலாண்மைக்குழு உறுப்பினர் டி.லிவிங்ஸ்டன் மோசஸ், அவை துணைத்தலைவர் இரா.சீனிவாசன்,   பொருளார் வி.பழனி,  மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்  டாக்டர் வீ.தீனபந்து, தணிகை ஜி.செல்வம், முன்னிலை வகித்தனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad