உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 17 December 2023

உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் என்று கடந்த 4 ஆண்டுகளாக மாதந்தோறும் 100 நபர்களுக்கு அரிசி பருப்பு சேமியா ரவை மஞ்சள்தூள் போன்ற நிவாரண பொருட்கள் கடந்த 74 மாதமாக தொடர்ந்து வழங்கி வந்த சமூக ஆர்வலர் கே வி ராஜேந்திரன் குடியாத்தம் செய்தியாளர்.

தற்போது 75 வது மாதமாக இன்று நடுப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 நபர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கேவி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வி ஐ டி பல்கலைக்கழக பேராசிரியர் சரவணன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


உடன்  முன்னாள் நகரமண்ற துனைத்தலைவர் எஸ்டி மோகன்ராஜ் ரோட்டரி சங்க தலைவர் ரங்கா வாசுதேவன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் விஇ.கருணா இமயவரம்பன் ரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.


இதில் கேவிகுப்பம் எம்விகுப்பம் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பெற்று சென்றனர். இறுதியில் பெருமாள் நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad