பாரத பிரதமர் மோடி அவர்களால் சிறந்த விவசாயி என பாராட்டு பெற்ற நத்தம் சம்பத் நாயுடு அவர்களை வட்டாட்சியர் அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். பல்ல குப்பத்திலிருந்து அகரம் சேரி சாலையில் உள்ள மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டும். குடியாத்தம் முதல் பலம்நேர் சாலையை பழுது பார்க்க வேண்டும்.
கல்லபாடியை சேர்ந்த இந்திராணி என்பவர் தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என்றும் குரங்கு தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும். மழை வெள்ளம் சேதாரம் தொடர்பாக பொதுப்பணித்துறையினர் மேற்கொண்ட பணிகள் விவரம் சிங்கல்படி தோட்டாலம் சாலையை சீர் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதி அளித்தார், பல்வேறு துறை அரசு அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்


No comments:
Post a Comment