காட்பாடி அருகே கழிவுநீர் கால்வாயாக மாறிய குடிநீர் குளம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 December 2023

காட்பாடி அருகே கழிவுநீர் கால்வாயாக மாறிய குடிநீர் குளம்.


வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழிவு நீர் கால்வாயாக கால்வாய் மாறிய குடிநீர் குளம் நேரில் சென்று பார்வையிட்ட கிராம நிர்வாக அதிகாரி மற்றும் விசிக கட்சியினர். 

காட்பாடி அருகே பிரம்மபுரம் ஊராட்சியில் அங்குள்ள பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் குளம் உள்ளது. இந்தக் குளம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த குலமாக திகழ்கிறது. இந்தக் குளத்தில் இருக்கும் நல்ல தண்ணீர் என்று ஊர் சுற்றி இருக்கும் பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.


இதனால் இந்த குளத்திற்கு நல்ல தண்ணீர் குளம் என்று பெயர் கொண்டது. இந்த குளம் சரியான முறையில் பராமரிக்காததால் ஊரில் உள்ள அனைத்து வீடுகளின் கழிவு நீர்த்தேக்கமாக மாறிவிட்டது. இதனால் இந்த குளத்தின் அருகே சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வரும் மக்களுக்கு துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லைகள் பாம்பு பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இது தொடர்பாக ஊராட்சி தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி மக்களுக்கு நலன் கருதி விடுதலை சிறுத்தைகள் கட்சி காட்பாடி ராஜன் தலைமையில் ஒன்றிய செயலாளர் பிரவீன் தொகுதி செயலாளர் சிவராமன் முன்னாள் ஒன்றிய செயலாளர் விவேக் கிருஷ்ணன் ஒன்றிய பொறுப்பாளர் பிரசாந்த் முகாம் அமைப்பாளர் ராஜன் மற்றும் விஜயகாந்த் செந்தில் சரண் குறளமுதன் ரபி பிரீன் தாஸ் ராகுல் சதீஷ் ஹரிஷ் கிரேன் யுவன் சங்கர் என  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குளத்தை பார்வையிட்னர்.


இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்ட பொழுது குளத்தில் இருக்கும் நீரை விரைவில் அகற்றுவதாக ஊராட்சி தலைவர் கூறியதால் குளத்தை சரி செய்யவும் அப்பொழுது மக்களுக்கு விடிவு ஏற்படுத்தவும் விடுதலை சிறுத்தை கட்சியினர் விரைவில் அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளிக்க  இருப்பதாக தெரிவித்தனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad