வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூா் ஊா்ராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடியாத்தம் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது சீவூா் ஊராட்சி துணைத் தலைவர் அஜிஸ் (வயது40) அவர் வீட்டில் சோதனை செய்தபோது சுமார் ₹2 லட்சம் மதிப்புள்ள குட்கா பான் மசாலா பரிமுதல் செய்தனர். இதனிடையே அஜீஸ் தலை மறைவாகிவிட்டார் இது குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment