வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பகுதியில் காய்கறிக் கடை நடத்தி வரும் புவனேஷ் (வயது 31) என்பவர் தன்னை புதுவசூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (எ) வெள்ளை, பாலாஜி (வயது 37) என்பவர் அடிக்கடி தான் நடத்தி வரும் காய்கறி கடையிடம் வந்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும், மேலும் தகாத வார்த்தைகளால் அருவருக்கத்தக்க வகையில் பேசுவதாகவும் மற்றும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், சத்துவாச்சாரிகாவல் ஆய்வாளர் ரவி விசாரணை மேற்கொண்டு பாலாஜி (எ) வெள்ளை பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment