வேலூர் மாவட்டம் குடியாத்தம் அலங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தில் சாலை ஓரம் உள்ள விவசாயியின் தென்னந்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் சுமாா் 2000 விஷ குளவிகள் கூடு கட்டி இருந்தது.
அந்த வழியாக செல்லும் பொது மக்களை அச்சுறுத்தி வந்தது இது சம்பந்தமாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தென்னை மரத்தை சுற்றி கட்டியிருந்த குளவிகூண்டை நோக்கி கெமிக்கல் தண்ணீரை பீச்சு அடித்தனர். சில மணி நேரத்திற்கு பிறகு சுமார் 2000 விஷகுளவிகள் அழிக்கப்பட்டன.
இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்ற வாகன ஓட்டிகளை மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. தங்கள் குழந்தைகளையும் வெளியே வராத வண்ணம் கவனித்து வந்தார்கள், விஷக் குளவிகூண்டை அழித்த தீயனைப்பு வீரர்களை பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment