வேலூர் மாவட்டம் வேலூர் மாங்காய் மண்டி அருகே ராகேவேந்திரா தியேட்டர் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்டு சாலை அமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளித்தது.
தற்போது மழை பெய்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சேறும், சகதியுமாக உள்ளது. இதையடுத்து கார்த்திகேயன் எம் எல். எ மேயர் சுஜாதா, கமிஷனர் ஜானகி ஆகியோர் அதிகாரிகளுடன் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மழைக்காலம் முடிந்த பின்னர் ரூ. 25 லட்சத்தில் சாலை அமைக்கப்படும் என அவர்கள் கூறினர். தொடர்ந்து அவர்கள் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிக்கல்சன் கால்வாயையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுபால பணியையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது மாநகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் காஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment