பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் தமிழ்நாடு அரசு ஆணைக்கு ஆசிரியர்கள் வரவேற்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 19 December 2023

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் தமிழ்நாடு அரசு ஆணைக்கு ஆசிரியர்கள் வரவேற்பு.


வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்கல்வி அரசுத்தேர்வுகள் இயக்கத்தின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, துணைத் தேர்வு, தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்களின் ஒளி நகல் (Scan Copy) வழங்கவும் மறுக்கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டு பணிகளுக்கு அனுமதி அளித்தும் கட்டணம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன்,  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு பொதுத்தேர்வெழுதும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 2001-02 ஆம் ஆண்டு முதல் விடைத்தாள் நகல் (Scan Copy) வழங்கப்பட்டு வந்தது 10வகுப்பு மாணவர்களுக்கு இவ் வசதி வழங்கப்பட்டவில்லை இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் விடுத்த கோரிக்கையினை ஏற்று 2023-24ஆம் கல்வியாண்டு முதல் தேர்வெழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல், மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்திட அனுமதி அளித்தும் கட்டணம் நிர்ணயம் செய்தும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆணையிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பிலும் வேலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பிலும் வரவேற்பினை தெரிவித்துக்கொள்கின்றோம்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad