விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 19 December 2023

விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் மாதத்திற்கான குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

நேர்முக உதவியாளர் நெடுமாறன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில்  தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவ சங்கரன் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர் வனத்துறை அலுவலர் மாசிலாமணி மின்சார வாரிய இடைநிலை பொறியாளர் உமா மகேஸ்வரி அரசு மருத்துவர் சுகன்யா சுகாதார ஆய்வாளர் பிரகாசம் கூட்டுறவு சார்பதிவாளர் சதீஷ்குமார் சதீஷ்குமார் நெடுஞ்சாலைத்துறை மகாலட்சுமி போக்குவரத்து துறை கிரி ஆகியோர் பங்கேற்றனர்.


வளத்தூர் ஏரியில் ஒரு சிறு பாலம் அமைப்பு 100 மீட்டர் கரை அமைத்து தந்தால் வண்டி டிராக்டர்கள் மூலம் கரும்பு தேங்காய் எடுத்துச் செல்ல முடியும் மேலும் மின்சார மின்மாற்றிகள் 2 உள்ளது அது   பழுதடைந்தால் தண்ணீர் உள்ளபோது ஆறு மாதம் மின்தடை ஏற்படுகிறது இதனால் சுமார் 200 ஏக்கருக்கு மின்சாரம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை பாக்கம் பாளையத்துக்கு நிரந்தர அரசு பேருந்து இயக்க வேண்டும்.


காட்டுப்பன்றி குரங்குகள் போன்ற வன விலங்குகளால் விவசாயம் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது வனவிலங்குகள் விவசாய நிலத்துக்கு வராத அளவிற்கு வனத்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள் விரைவில் இதற்கான தீர்வு ஏற்படுத்தப்படும் என்று உறுதி அளித்தனர். இதில் குடியாத்தம் கே வி குப்பம் பேரணாம்பட்டு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad