வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் என்இ.சத்யானந்தம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய துணைத் தலைவர் அதிமுகவை சேர்ந்த அருண் முரளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன் கல்பனா மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது ஒன்றியக்குழு துணைத் தலைவர் அருண் முரளி தலைமையில் எங்களுக்கு தெரியாமலே ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு பணிகளை கொடுக்கிறார்கள் ஒன்றியத்தில் எந்த பணிகள் மேற்கொள்கிறார்கள் அனைத்தும் வெளிப்படை தன்மை வேண்டும். என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்து தரையில் உட்கார்ந்து தர்னாவில் ஈடுபட்டனர், தகவல் அறிந்தவுடன் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் என்இ.சத்யானந்தம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இதனால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment