வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகர அரங்கம் அருகில் இருந்து தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் மொழி சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இதில் திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர் இதனை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் எங்கும் எதிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும் தாய் மொழி வளர்ச்சி நமது வளர்ச்சி என பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஊர்வலமாக கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தமிழ் மொழி சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த ஊர்வலமானது வேலூர் ஊரீசு கல்லூரியில் நிறைவடைந்தது.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment