வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் எதிரில் குடியாத்தம் நகராட்சி இருக்கும் 36 வார்டுகளில் முறையான முறையில் குப்பைகளை அள்ளுவதும் கழிவு நீர் கால்வாய்களை சுத்தப்படுத்துவதும் இல்லை என்று நகராட்சி வரி வசூல் செய்வதில் மட்டும் குறியாக உள்ளது என்றும் குற்றம் சாட்டி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சாய் ஆனந்தன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் ரங்கநாதன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் பார்வையாளர் ஜெகநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் கேவிகுப்பம் சட்டமன்ற பார்வையாளருமான லோகேஷ் குமார் கூட்டுறவு மேம்பாட்டு திட்டதலைவர் வாகீஸ்வரன் பாரத பிரதமர் நல திட்ட பிரிவு தலைவர் சந்திர மௌலி விருந்தோம்பல் பிரிவு சுசில் மகளிர் அணி பொது செயலாளர் மஞ்சு மகளிர் அணி செயலாளர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர். நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கால்வாயில் தூர் எடுப்பது குப்பைகளை அப்புறப்படுத்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இறுதியில் குமரவேல் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment