வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் N.மணிவண்ணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் முகாம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் அளித்து குறைகளை கூறி வருகின்றனர்.
அது மட்டுமின்றி வாரத்திலுள்ள அனைத்து நாட்களிளும் பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பெதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S.பாஸ்கரன் (HQrs), கேட்டீஸ்வரன் (CCW) மற்றும் கௌதமன் (CWC) ஆகியோர்களின் முன்னிலையில் இன்று 20.12.2023-ம் தேதி நடைபெற்ற சிறப்பு குறை தீர்வு மனு நாளில் பொதுமக்களிடமிருந்து 24 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment