வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை கருவியின் செயல்முறை விளக்கத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

(22.12.2023) வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிறு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.மதுமதி இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் பாலமுருகன் (பொது) தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி வேலூர் வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.

No comments:
Post a Comment