இணையதளம் செயல்படாமல் அரசு சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 December 2023

இணையதளம் செயல்படாமல் அரசு சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் அவதி.


குடியாத்தம், பேர்ணாம்பட்டு கட்டுமானம் அனைத்து அமைப்புச் சாரா தொழிற்சங்கத்தின் தொழிலாளர்களின் கூட்டமைப்பில் உள்ள தொழிலாளர்கள் கடந்த 02-12-2023 முதல் இருபது நாட்களுக்கும் மேலாக இணையதளத்தில் பதிவேற்றுதல் செயல்படவில்லை. பதிவு, புதுப்பித்தல் மற்றும் உதவி நிதிகள் கல்வி, ஓய்வூதியம், திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம் இதுபோல் பலவித உதவிகள் பதிவேற்றம் செய்யமுடியாமல் தினந்தோறும் தொழிலாளர்கள் அலைந்து திரிந்து வருகிறார்கள். காரணம் இணையதள சர்வர் செயல்படவில்லை. இத்தொழிலாளர்களின்  பகுதி சேர்மன் அவர்களும் இதில் கொஞ்சம் கூட கவணம் செலுத்தவில்லை என பொது மக்கள் வேதனை தெரிவித்தனர். கடந்த ஆட்சியில் புயல் மழை மற்றும் சுனாமி காலத்தில்கூட இதுபோன்று  பிரச்சனைகள் வரவில்லை.

கடந்த பல மாதங்களுக்கு முன்பு ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் விலையுயர்ந்த சர்வர் வாங்கி இணையதளத்தில் இணைத்துள்ளோம் என்றும் இனிமேல் இணையதள சர்வர் பிரச்சனை வரவாய்ப்பு இல்லை என்று சேர்மன் பொன்குமார் அவர்கள் சொன்னார்கள்.ஆனால் அவர் சொன்னதற்கு மாறாக இதுகுறித்து பலமுறை எடுத்துச் சொல்லியும் பிரச்சனை தீரவில்லை. இணையதள சர்வர் செயல்படாமல் இருக்க மூன்று காரணங்கள் தான்.

  1. சர்வர் பராமரிப்பு வேலை நடைபெற்றால் இணையதள சேவை  பாதிக்கப்படும்.
  2. சர்வர் இணையதள சேவைக்கான பணம் கட்டவில்லை என்றால் வேலை செய்யாது, லோக்கல் சர்வர் பயன்படுத்தினால் இது போன்ற பிரச்சனை வரலாம்.

எப்படி இருந்தாலும் இணையதள சேவை பொருத்தவரை குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்குள் செயல்பாட்டுக்கு கட்டாயம் கொண்டுவரவேண்டியது அரசின் கடமை. ஆனால் இதுவரை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் 20 நாட்களுக்கு மேல் இணையதளம் முடங்கி இருப்பது வரலாற்றில் தொழிலாளர்களுக்கு  இதுவே முதன்முறை. இது தொழிலாளர்களின் மேல் அரசுக்கு அக்கரை இல்லாத செயலாகவே பார்க்கப்படுகிறது.


வருகின்ற 26-12-2023 அன்று சர்வர் பிரச்சனை தீராது நிலை ஏற்பட்டால் மாபெரும் போராட்டம் சென்னையில் நடத்தவுள்ளோம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என இன்று 21-12-2023 ல் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.இமயவரம்பன் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் இல்லாத காரணத்தால் அவரது நேர்முக உதவியாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


இதில் கூட்டமைப்பின் பொருலாளர் டைலர் பழனி, கெளரவத் தலைவர் சுயராஜி, துணைத்தலைவர்கள் கேசவமூர்த்தி- வி.சரளா, துணைச்செயலாளர் மதியழகன் மற்றும் வாசுதேவன், சீனிவாசன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad