வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி தேன் பள்ளி ஊராட்சி வெங்கடாபுரம் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால் ஐந்து நாட்களில் அறுவடை செய்ய தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம் அடைந்து இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர் மழையினால் வயல்வெளி முழுவதும் தண்ணீர் நிரம்பியதன் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகி இருப்பதாகவும் நாங்கள் கடன் உதவி பெற்று இந்த விவசாயத்தை செய்தோம் ஆனால் தற்போது அனைத்து நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி நாசமானது தங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தங்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment