வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ப.சுமதி இல்ல குழந்தைகளுக்கு பெட்ஷீட், பக்கெட், வாளி, மக் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். விழாவிற்கு பொருளாளர் வி.பழனி தலைமை தாங்கி பேசினார். முன்னதாக அரசினர் குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் கே.எ.சாந்தி வரவேற்று பேசினார். டாக்டர் வீ.தீனபந்து, ஒய்ஆர்சி தலைவர் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் மேலாண்மைக்குழு உறுப்பினர் லிவிங்ஸ்டன் மோசஸ், டாக்டர் ஜார்ஜ் கோஷி, ஜவகர், எ.ஜெ.சாம்ராஜ் நளினி, செல்வம், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
காட்பாடி ரெட்கிராஸ் வாழ்நாள் உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், முனைவர் கே.அந்தோனிபாஸ்கரன், பி.பாலசுப்பிரமணி, வில்லவன், எ.ரவி ருத்ரமூர்த்தி உள்பட இல்ல மாணவிகள் பங்கேற்றனர். கிறிஸ்மஸ் விழாவினை முன்னிட்டு செயற்குழு உறுப்பினர் டி.லிவிங்ஸ்டன் மோசஸ், டாக்டர் ஜார்ஜ் கோஷி,ஜவகர், ஆகியோர் சார்பாக மாணவிகளுக்கு தேவையான பெட்ஷீட், டவல்-, தண்ணீர் வாளி(பக்கெட்) தண்ணீர் மக், மற்றும் இனிப்பு பிஸ்கட் ஆகியவற்றை மாவட்ட வழங்கல் அலுவலர் ப.சுமதி வழங்கினர். மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றது. முடிவில் காப்பக பாதுகாவலர் விஜயா நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்


No comments:
Post a Comment