விடுதலையான சிறைவாசிகள் மறுவாழ்விற்காக தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நிதி உதவி்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினார். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 27 December 2023

விடுதலையான சிறைவாசிகள் மறுவாழ்விற்காக தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நிதி உதவி்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.


வேலூர் மாவட்டம் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் விடுதலையான 22 முன்னாள் சிறைவாசிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு நாளை 27.12.2023 காலை 10 மணி அளவில் வேலூர் கோட்டை சுற்று சாலையில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சித் தலைவரும் சங்கத்தின் தலைவருமான பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கி 22 பேருக்கு 5.5 இலட்சம் நிதி உதவியினை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நிதி உதவியை பெறும் முன்னாள் சிறைவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சமூகத்தில் விறந்து விளங்கிட வேண்டும்.  தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளவும் ஆடு, கறவை மாடு வளர்ப்பு சிற திண்பண்ட கடைகள், பழக்கடைகள், வேளாண்மை காய்கறி கடைகள் போன்ற தொழில்கள் மேற்கொள் சமூகத்தில் உயர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்றார்.


வேலூர் மாவட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 167 முன்னாள் சிறைவாசிகளுக்கு 31.10 இலட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு முன்னாள் சிறைவாசிகளிடமிருந்து பெறப்பட்ட மனு, நன்னடத்தை அலுவலர், மண்டல நன்னடத்தை அலுவலரின் பரிந்துரையின் அடிப்படையில் 22 நபர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்த 5.50 இலட்சம் வங்கி மூலம் நேரடியாக அவர் அவர் வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்பட்டது.  தற்போது வரை மொத்தம் 189 நபர்களுக்கு 36.30 இலட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் சிறைவாசிகளுக்கு வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட ஜவுளி துணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது சொந்த செலவில் வழங்கினார். சங்கத்தின் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.


இந்த நிகழ்வில் சட்ட ஆலோசகர் மற்றும் துணைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் டி.எம்.விஜயராகவலு முன்னிலை வகித்து பேசினார்.  வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஏ.எஸ். அப்துல் ரகுமான், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.கே.கவிதா, நன்னடத்தை அலுவலர்கள் சரவணன், ஹேமலதா வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் வை.நடனசிகாமணி, உறுப்பினர்கள் எஸ்.திருமாறன், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், பி.என்.ராமச்சந்திரன், வேலூர் வட்டாட்சியர் பி.செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் ஆர் சீனிவாசன் நன்றி கூறினார். 


  - வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad