வேலூர் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 27 December 2023

வேலூர் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு.


வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் இன்று 26.12.2023-ம் தேதி வேலூர் உட்கோட்டம், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்திலுள்ள அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மனுக்கள் மீதான விசாரணை பற்றியும், நிலுவையிலுள்ள மனுக்கள் பற்றியும் கேட்டறிந்து, மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணவும் உத்தரவிட்டார். 

வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், POCSO வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் நடத்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தருமாறு அறிவுறுத்தினார். 


மேலும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் பொதுமக்களிடையே பணிவான அணுகுமுறையோடு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad