திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்காரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் என்ற சந்தோஷ். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் பென்னாதூர அடுத்த சாத்துப்பாளையத்தில் இருந்து ஆரணி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். வேலூர் தாலுகா காவல் நிலையம் அருகே சென்றபோது எதிரே ஆவின் பால் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் சந்தோஷ தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் விபத்து நடந்த சாலைகள் நின்றிருந்த லாரிக்கு பின்னாடி வேலூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற ஆரணியை அடுத்த கிளியனூர் பகுதியை அதேபோல் விபத்து நடந்த சாலைகள் நின்றிருந்த லாரிக்கு பின்னாடி வேலூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற ஆரணியை அடுத்த கிளியனூர் பகுதியை சேர்ந்த சந்துரு என்பவர் லாரியின் பின்னாடி மோதியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment