வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்எஸ்கே நகர் பகுதி மக்களின் குடியிருப்புகளை கடந்த சில மாதங்களாக நீதித்துறை உத்தரவுப்படி குடியிருப்பு வீடுகளை தரைமட்டமாக்கினர். பின்பு வருவாய் துறையினர் மாற்று இடம் அல்லது குடிமனை பட்டா வழங்குவதாக உறுதி அளித்திருந்தார்கள்.
இதுவரை பட்டா (அல்லது) மாற்று இடம் வழங்கவில்லை என்பதால் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி. தலித்குமார் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடா ராமன் அவர்களை சந்தித்து முறையிட்டனர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் இன்னும் பத்து நாட்களுக்குள் பட்டா (அல்லது) மாற்று ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். உடன் இந்திய குடியரசு கட்சி மாவட்ட துணை தலைவர் மாது மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment