வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை மக்களுடன் முதல்வர் சிறப்புதிட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் அவர்கள் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் மு. வெங்கட்ராமன் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி குடியாத்தம் துயர் துடைப்பு பிரிவு வட்டாட்சியர் சரவணன் நகர மன்ற உறுப்பினர்கள் ஜிஎஸ்.அரசு அர்ச்சனா நவீன் ஆட்டோ மோகன் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் நகராட்சி துறை வருவாய்த்துறை மின்சார வாரியம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட 13 துறை சார்ந்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் சுமார் 493 மனுக்கள் பெறப்பட்டன பெறப்பட்ட மனுக்கள் 30 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படும் என்று அரசு அதிகாரிகள் கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment