பேரணாம்பட்டு நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 December 2023

பேரணாம்பட்டு நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வரின் முகவரி துறை சார்பில் மக்களுடன் முதல்வர் எனும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 18ம் தேதி அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கிவைத்தார்.

அதனை தொடர்ந்து இத்திட்டம் வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி மண்டலம் 1க்குட்பட்ட செங்குட்டையில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர்திட்டம் 18ம் தேதிமுதல் 05.வரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அருகில் அமைந்துள்ள 18 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறவுள்ளது.


இம்முகாமில் அமைக்கப்பட்டிருந்த 14 துறைகளின் மனுக்கள் வேலூர் மாவட்டம் பதிவுசெய்யும் மையங்களை குடியாத்தம் சட்டமன்றத் பார்வையிட்டார். மேலும் தொகுதி பேரணாம்பட்டு நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டமுகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் முறைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இம்முகாமில் அரசின் சார்பில் எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை,கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை(சமூகபாதுகாப்பு திட்டம்) ஆகிய 14 துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் உடனடியாககணினியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.


இந்நிகழ்வின்போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் பிரேமா துணைத்தலைவர் ஆலியார் ஜூபேர் அகமத், மண்டல இயக்குநர் நகராட்சிநிர்வாகம் தனலட்சுமி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, நகராட்சி ஆணையர் வேலவன்,வட்டாட்சியர் சுரேஷ்குமார்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


- வேலூர்  தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad