நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகரலயன்ஸ் சங்கத்தின் தலைவர் டி.கமலஹாசன் தலைமை தாங்கினார் செயலாளர் எஸ்.முருகதாஸ் ஆசிரியர்கள் ஹரிகிருஷ்ணன் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் என். சுந்தர் துணை தலைவர் நித்யா வாசு ஊராட்சி செயலாளர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு லயன்ஸ் மாவட்ட அவை பொருளாளர் எம்கே. பொன்னம்பலம் லயன்ஸ் மாவட்ட எல்சிஐஎப் ஒருங்கினைப்பாளர் டாக்டர் என். வெங்கடேஸ்வரன் ஆகியோர்கள் முகாமை துவக்கி வைத்தனர் டாக்டர்கள் பி.பிரீத்தா பிரேமலதா சந்தியா ஆகியோர் சிகிச்சை அளித்தனர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஏ.சுரேஷ்குமார் என்எஸ்.விவேகானந்தம் ஜெ.பாபு மற்றும் ஆரம்பசுகாதாரநிலைய செவிலியர்கள் ஊர்பிரமுகர்கள் செந்தில் ராமு வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமில் தொழுநோய் பொதுநல மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனை மற்றும் மருத்துவம் அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment