மக்களுடன் முதல்வர் திட்டத்தை திங்களன்று கோவையில் தமிழக முதல்வர மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்ததை தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி பகுதியான 1-வது மண்டலம் காட்பாடி செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜானகி, துணை மேயர் சுனில்குமார், திட்ட இயக்குநர், 1-வது மண்டலத் தலைவர் புஷ்பலதா, சுகாதார அலுவலர் சிவக்குமார், பொறியாளர் செந்தில், 1-வது வார்டு கவுன்சிலர் அன்பு மற்றும் மண்டல திமுக கவுன்சிலர்கள், அரசு துறை அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் 1 -வது மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் பார்த்தசாரதி நன்றி கூறினார்
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...

No comments:
Post a Comment