குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் துவக்கம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 January 2024

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் துவக்கம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் டெக்ஸ்டைல்ஸ் கூட்டுறவு நியாவிலை கடையில் பொங்கல் தொகுப்பு பச்சரிசி சக்கரை முழு கரும்பு ரொக்கம் ரூபாய்  1000 வழங்க விழா இன்று  12 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு டெக்டைல்ஸ் கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் தரணி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தொகுப்பு மற்றும்  ரொக்கம் ரூபாய் 1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம், CSR பாலசுப்பிரமணியம், கவிதா விற்பனையாளர்கள் ராஜேந்திரன், மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.





குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad