வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மற்றும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் துப்புரவுப் பணியை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்திரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா, வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் ஆகியோர் தலைமையில் வேலூர் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் பகுதி மேற்பார்வையாளர் மதிவாணன் குழுவினர் துப்புரவுப் பணியை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது மாநகராட்சி உறுப்பினர்கள் சித்ரா லோகநாதன், சித்ராமகேந்திரன், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் விமலா, துணைத்தலைவர் கௌதமி பள்ளி உதவித்தலைமையாசிரியர்கள் எம்.மாரிமுத்து, கே.திருமொழி, பி.ரோசலின் பொன்னி ஆகியோர் உடனிருந்தனர்.
பள்ளி வளாகத்தில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. மாணவியர் கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை படுத்தும் பணியினையும் மேற்கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.
No comments:
Post a Comment