சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் 92 ஆம் ஆண்டு நினைவு நாள். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 January 2024

சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் 92 ஆம் ஆண்டு நினைவு நாள்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் அவர்களின் 92 ஆம் ஆண்டு நினைவு நாள், முன்னிட்டு   தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளை சார்பில் குடியாத்தம் நகராட்சி அலுவலக வளாகத்தில் அவரது  திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளையின் மாநில செயலாளர் எஸ் சுரேஷ், மாநில பொருளாளர் பேராசிரியர வே.வினாயகமூர்த்தி  ஆகியோர் தலைமை தாங்கினார்கள். குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன்  குடியாத்தம் நகராட்சி ஆணையர் எம்.மங்கையற்கரசன் நகர மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு ,டி. பி. என். கோவிந்தராஜன் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலையிட்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.


பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன், கம்யூனிஸ்ட் கட்சி (CPM) சார்பில் வழக்கறிஞர் சு.சம்பத்குமார், காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய தலைவர் வீராங்கன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் விஜயேந்திரன் உட்பட பொதுமக்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். முடிவில் வேலூர் மாவட்ட தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளையின் மாவட்ட தலைவர் ப.ஜீவானந்தம் நன்றியுரை ஆற்றினார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad