வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் 35 வது வார்டு சார்பாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 35-வது வார்டு பொருளாளர் என் தவபாலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக 35 வது வார்டு மேலைமைப்பு பிரதிநிதி கே வி ராஜேந்திரன் கலந்துகொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆர் சகாயம் D ஞானசேகரன் அருண் ஸ்ரீகாந்த் முரளி ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட இறுதியில் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment