வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டையில் தையல் கடை நடத்தி வரும் மகேஷ் இவர் அதே பகுதியைச் சேர்ந்த அரசு என்பவரின் கடையில் மாத வாடகைக்கு தையல் கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடந்த மூன்று மாதமாக வாடகை கொடுக்காத மகேஷிடம் கண்டிப்பாக இன்று வாடகை கொடுக்க வேண்டும் என்று கேட்ட கடை உரிமையாளர் அரசு மீது ஆத்திரம் கொண்ட தையல் கடைக்காரர் மகேஷ் துணிகளை கத்தரிக்க வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து மார்பு தோள்பட்டை என பல்வேறு இடங்களில் சரமாரியாக ஆத்திரம் கொண்டு குத்தி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த உரிமையாளர் அரசு ரத்தம் சொட்ட சொட்ட அங்கேயே சுருண்டு விழுந்து உள்ளார். கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர் அரசு என்பவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனடியே கடை உரிமையாளரை கத்திரிக்கோலால் குத்திய தையல் கடைக்காரர் மகேஷ் காவல்துறையினர் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .கடை வாடகை கேட்ட கடை உரிமையாளரை கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment