பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை(பொ) எம்.மாரிமுத்து தலைமை தாங்கினார். ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், மாமன்ற உறுப்பினர் சித்ரா மகேந்திரன் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் மகேந்தினர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
முன்னதாக உடற்கல்வி ஆசிரியை எஸ்.புவனா வரவேற்று பேசினார். இறகுபந்து போட்டிக்கு 18 வயது மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா முழுவதும் 10 பேர் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர் இதில் தமிழகத்தின் சார்பில் ஒரே மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அவர் வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவி என்.பி.ஆதர்ஷினிஶ்ரீ ஆவார். அன்னார் வெற்றி பெற பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரிய ஆசிரியைகள், மாணவிகள் பாராட்டினர். பெற்றோர் எம்.பூபதிபாலாஜி-கல்யாணி இணையரின் மகள் ஆவார்.
இவர் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை வேலூர் மாவட்டம் திருமணி அரசு உயர்நிலை பள்ளியில் பயின்றார். 9ஆம் வகுப்பு காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். ஏற்கெனவே சீனனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு சப் ஜுனியர் போட்டியில் பங்கேற்றளார் மேலும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களும் கோப்பைகளையும் பெற்றுள்ளார். முடிவில் முதுகலை தாவரவியல் ஆசிரியை எம்.சங்கீதா நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.
No comments:
Post a Comment