வேலூர் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் 14 வது தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரவணன் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வாசுகி கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராம் பாஸ்கர் கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை கிராம உதவியாளர்கள் பழனி மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.
வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன, ஜெயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment